A person disguised as a woman and tried to steal from the house- Police investigated with the help of CCTV footage

Advertisment

திருவள்ளூரில் ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு பட்டப்பகலில் வீட்டில் திருட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமபுரம் அருகே உள்ள கோகுல் கார்டன் பகுதியைச்சேர்ந்தவர் வேல்குமார்.அந்தப் பகுதியிலேயேபூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார்.அவரது வீட்டின் அருகே மர்ம நபர் ஒருவர் நடமாடுவதாக அவருக்குத்தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த வேல்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துப் பார்த்தபோது சேலை கட்டிக்கொண்டு முகத்தை மூடி மறைத்தபடி மர்ம நபர் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது எகிறிக் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து, வேல்குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.