Skip to main content

கரோனாவுக்கு பதிலாக வேறு காரணம் காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு!! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்...

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

person dead in corona

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பழம் குணம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு, இவர் பின்னல்வடி கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணி செய்து வருகிறார். இவருக்கு கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

இதையடுத்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை அவரை முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மதியம் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

தகவல் அறிந்து ராஜா கண்ணுவின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு  சென்று இருந்தனர். அப்போது ராஜகண்ணுவின் இறப்பு சான்றிதழில் நுரையீரல் பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

 

இதனால் சந்தேகமடைந்த ராஜாக்கண்ணு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி ருகின்றனர். இதனால் ராஜாக்கண்ணு உடல்  பிரேத பரிசோதனை அறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இராஜாக்கண்ணுவின் உறவினர்கள் தெரிவித்தாவதுஇராஜாக்கண்ணு அரசு உழியர் என்பதால், கரோனோவால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்றால் நிவாரண தொகையாக ஐந்து இலட்சம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இறப்பு சான்றிதழில் மாற்றி எழுதியிருப்பதாக கூறுகின்றனர். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்