சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் என்ற இடத்தில் புகைபிடிக்க தீப்பெட்டி கேட்க தரமறுத்தவரைஉருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் சேலையூரை அடுத்த பதிவஞ்சேரி பிரதான சாலையிலுள்ள பாஸ்ட்புட் கடைஒன்றில் நின்றுகொண்டிருந்த ராஜேஷ் என்ற இளைஞரிடம் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகைபிடிக்க தீப்பெட்டி கேட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z25_6.jpg)
ஆனால் தீப்பெட்டியை ராஜேஷ்தரமறுத்ததால் இருதரப்புக்கும் வாய் வார்த்தை முற்றி இறுதியில்கைகலப்பானது. இந்த சம்பவத்தில் அந்த அடையாளம் தெரியதா அந்தநபர்கள் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் ராஜேஷை சரமாரியாகதாக்கினர். இதில் காயமடைந்த ராஜேஷ் சேலையூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக பார்த்தீபன் என்ற இளைஞரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z27_7.jpg)
மேலும் இந்த சம்பவத்தில் ராஜேஷ் மீதுதாக்குதலில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற நபரை தேடிவருகின்றனர்.
Follow Us