person arrested who troubled to the police in viluppuram

விழுப்புரம் அருகில் உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். கூலி வேலை செய்து வரும் இவர், அவ்வப்போது வேலைக்குச்செல்லாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி மது குடித்துவிட்டு வந்து வீட்டிலும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

வழக்கம்போல் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த லட்சுமணன், அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது மனைவி, அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஏன் பிரச்சனை செய்கிறாய் என்று கணவரை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

Advertisment

கணவரின் அடி தாங்க முடியாத அவர், அவசர போலீஸ் 100க்கு தகவல் அளித்துள்ளார். அதில், கணவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாகவும் அவர் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் செல்போன் மூலம் கூறி அழுதுள்ளார். உடனடியாக அவசர போலீஸ், சம்பந்தப்பட்ட விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத்தகவல் அளித்துள்ளது. அங்கிருந்து காவலர் முத்துக்குமரன் என்பவர் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கண்டம்பாக்கம் சென்ற காவலர் முத்துக்குமரன், மது போதையில் இருந்த லட்சுமணனிடம் விசாரித்துள்ளார். விசாரணைக்கு வந்த காவலரிடமும் தகராறில் ஈடுபட்ட லட்சுமணன், காவலர் முத்துக்குமரனை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். லட்சுமணனின் தாக்குதலுக்கு ஆளான காவலர் முத்துக்குமரன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், லட்சுமணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். பிறகு கைது செய்யப்பட்ட லட்சுமணன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment