Advertisment

பொதுக்கழிப்பறைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; கூலித்தொழிலாளி போக்சோவில் கைது!

Person arrested under pocso in salem thathakapatti

சேலம் தாதகாப்பட்டி கார்ப்பரேஷன் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாய் என்கிற காதர்பாஷா (54). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி, அதே பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையைப் பராமரிக்கும் பணி செய்து வருகிறார். சில நேரம், மனைவிக்கு உதவியாக காதர் பாஷாவும் பொதுக்கழிப்பறையை சுத்தம் செய்வார்.

Advertisment

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பொதுக்கழிப்பறைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் காதர்பாஷா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமிகள் இருவரும் தங்கள் பள்ளி ஆசிரியைகளிடம் கூறியுள்ளனர். அவர்கள் சேலம் நகரக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணயில் காதர் பாஷா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

Advertisment

POCSO Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe