Person arrested in farmers tractor theft case

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ளது அகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முரளி, விவசாயத்திற்கு பயன்படுத்தும்டிராக்டரை,கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். அதை,மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து முரளி, மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரது புகாரையடுத்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ராஜி உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் டிராக்டர் திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சித்தாமூர் பகுதியில் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், காவலர்கள் பிரகாஷ், சிவஜோதி, வீரப்பன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டிராக்டர் ஒட்டிக் கொண்டு வந்த நபரை மறித்து விசாரணை செய்தனர். அவர், கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவர், கடந்த 2016ஆம் ஆண்டு வளவனூர் கிராமத்தில் ஒரு விவசாயடிராக்டர் திருடி உள்ளதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகரம் கிராமத்தில் முரளியின் டிராக்டர் திருடியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து மணிகண்டன் மீது மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இரண்டு டிராக்டர்களையும் அது சம்பந்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்ததோடு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.