Advertisment

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்!

Person arrested cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் மாடு மேய்ப்பதற்காக வயலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

Advertisment

அப்போது அவர்கத்தி கூச்சல் போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்ஓடி வந்துள்ளனர். அவர்களை கண்ட வாலிபர்கள் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்போது சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனதையடுத்து பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு திரண்டு சென்றனர்.

Advertisment

அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி அவர்களிடம்உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மருதத்தூறை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கருணாமூர்த்தி வயது 31 என்பவர் சிறுமி மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது சிறுமியின் வாயை பொத்தி மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. அதை எடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe