Person who affected by mental ill passes away

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் ஒன்று உள்ளது.இந்த மயானத்தில் ஈமக்காரியங்கள் செய்ய,திறந்தவெளி கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தில் நேற்று (22.07.2021) ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

இதையடுத்து அங்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்,இறந்தவர் ஈரோட்டை அடுத்துள்ள சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூரைச் சேர்ந்த அசேன் சேட்டு (52) என்பதும், திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்துவந்ததும் தெரியவந்தது.

Advertisment

இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன் சேட்டு தலையில் கல்லை போட்டதோடு எரித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சசி மோகன், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப் பதிவுசெய்து, கொலையாளிகளைத் தேடிவருகிறார்.