Permission should be given to Girivalam - Murugan's speech at thiruvannamalai

தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரையை நடத்திக்கொண்டு இருக்கிறார். நவம்பர் 17ஆம் தேதி திருவண்ணாமலை நகரத்தில் இருந்து வேல் யாத்திரை நடத்த வருகை தந்திருந்தார். அதற்கான பொதுக்கூட்டம் திருவண்ணாமலை நகரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது. இதில் 2,000க்கும் அதிகமான பாஜகவினர் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய முருகன், “நாங்கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த வேல் யாத்திரை நடத்துகிறோம். நவம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை டிசம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூரில் முடிக்கிறோம். திருவண்ணாமலை என்பது ஆன்மீக பூமி, இங்கு கிரிவலம் பெரும் புகழ்பெற்றது. இந்த கிரிவலத்தை தடை செய்திருப்பதை கண்டிக்கிறேன். கிரிவலம் செல்ல உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும்.

Advertisment

அதேபோல் கார்த்திகை தீபத்திருநாள் புகழ்பெற்றது, அதனை வெகு விமர்சையாக நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். கறுப்பர் கூட்டம் நம் முருகனை கொச்சைப்படுத்தியுள்ளது. இதற்கு பின்னணியில் இருப்பது திமுகதான். அதனால் தான் திமுக தலைவர் அதனை கண்டிக்கவில்லை. இதனை கண்டித்தும், திமுகவின் திருட்டு தனத்தை அம்பலப்படுத்தவே நாம் இந்த யாத்திரையை நடத்துகிறோம்” என்றார்.