காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லஅனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மலைப்பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி சுட்டுக்கொல்ல அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அதிகாரம் வழங்கி ஜூன் 4-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாகஎன அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், வனத்துறையின் ஒன்பதுகோட்டங்களின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகஉயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், பயிர்களை காக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.