Permission to renovate Kaniamoor school!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை மறு சீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்ட் குமார் அனுமதி அளித்துள்ளார். பள்ளியை சீரமைப்பது தொடர்பாக 10 நாட்களில் ஆட்சியர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து பரிசீலித்து அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், காவல்துறையின் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு 45 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment