மாநகராட்சிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி... 

Permission to open worship in corporations

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம்அமலில் உள்ள நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தது. அதனை அடுத்து தளர்வுகளின் அடிப்படையில் சிறிய கிராமப்பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் 10-ஆம் தேதி முதல்சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறந்து கொள்ளலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உடைய வழிபாட்டுத் தலங்களை ஆட்சியரின் அனுமதியைப் பெற்று திறந்து கொள்ளலாம். அதேபோல் சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம். ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பத்தாம் தேதி வரை முதல் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe