தமிழகத்தில், கரோனாகாரணமாகப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசுமேற்கொண்டு வருகிறது. மேலும், அக்டோபர் இறுதிவரைதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுஇருந்தது. இந்நிலையில், தமிழக அரசு இன்று (31-10-2020) ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நவம்பர் மாதம் முழுவதும் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமல்லாது நவம்பர் 16ஆம் தேதி முதல், ஒன்பதாம் வகுப்பு முதல்12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி புறநகர் மின்சார ரயில் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.