Permission for cinema shooting ... Government Publication on Guidelines

Advertisment

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு கட்டமாகஊரடங்குவிதிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 31 -ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டநிலையில், ஒவ்வொரு துறைகளிலும் வெளியிடப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி நேற்று வெளியிடப்பட்ட தளர்வுகளில்சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டநிலையில் சினிமா படப்பிடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.75 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவிதமான படிப்புகளையும் நடத்தக் கூடாது. படப்பிடிப்பு தளங்களைஅதற்கேற்ற தொழிலாளர்களுடன் தூய்மையான பகுதியாகவைத்து படப்பிடிப்புகளை நடத்த வேண்டும்.

படப்பிடிப்பு தளங்களில் பணியாற்றும்அனைவருமே முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமிநாசினியைஅடிக்கடி பயன்படுத்த வேண்டும். அங்கு இருக்கக் கூடிய கழிவறைகள் மற்றும்பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை முறையாக மேலாண்மை செய்தல் போன்ற வழிமுறைகள் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

படப்பிடிப்பில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு போக்குவரத்துக்காக மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டிருக்கும் அரசாணைபடியே நடந்து கொள்ள வேண்டும். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வழிமுறைகளைப் போன்று சினிமா படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகிறதோ அங்கு சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்த வேண்டும் எனப் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.