Advertisment

முதல்வரிடம் நேரில் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற ஐ. பெரியசாமி! 

Periyasamy met mkstalin

ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவுத்துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி பிறந்த நாள் விழா ஒவ்வொரு வருடமும் ஆத்தூர் தொகுதியில் உள்ள தி.மு.க.வினரும் பொதுமக்களும் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம்.

Advertisment

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் காரணமாக நேற்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆத்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் திமுகவினர் அக்கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் 69 பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

Advertisment

ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா துவாரகநாதன் பொது மக்களுக்கு அண்ணதானமும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல்லில் உள்ள அன்பகம் ஆதரவற்றோர் இல்லத்திலும் இந்திரா துவாரகநாதன் அன்னதானம் வழங்கினார்.

Periyasamy met mkstalin

இந்திரா துவாரகநாதன் தலைமையில் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, குருக்கள் மூலம் தலையில் பரிவட்டம் கட்டி தங்கத்தேர் இழுத்தார். இதில் மாநகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe