Advertisment

பெரியார் பிறந்தநாள்; திருச்சி சிவா மரியாதை..! 

Periyar's birthday; Trichy Siva tribute

Advertisment

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய அனைத்துக் கட்சிகளும் இன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றன.

இதில், ஒரு பகுதியாகத் திருச்சி காஜா மலையிலுள்ள ஈ.வெ.ரா. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மட்டுமே அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கடந்த ஆட்சியாளர்களால் தொழில்முறை ஆங்கிலம் (professional English course) கட்டாயம் என்றும் அதில் தேர்வாகி வந்தால் மட்டுமே பட்ட படிப்பை முடிக்க முடியும் என்கிற நிர்ப்பந்தமும் இருந்தது.

மேலும் தொழில்முறை ஆங்கிலம் (proffsional English) வகுப்பை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் அல்லாது எல்லா ஆசிரியர்களும் பாடம் எடுத்து வந்தனர். இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. என்னுடைய முயற்சியால் மாணவர்களின் சுமையை நீக்க இந்த Proffessional course நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த தியாகிகள் போர் நினைவுச் சின்னத்தை “பச்சம்பேட்டை வளைவு” ( லால்குடி மாந்துறை) பராமரிக்க தொல்லியல் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தேன், தற்போது அதனைப் புதுப்பிக்க வரைபடத்தை வெளியிட்டுப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

periyar trichy trichy siva
இதையும் படியுங்கள்
Subscribe