Skip to main content

பெரியார் பல்கலை. கோப்புகள் மாயமானதா அல்லது தீ வைத்து கொளுத்தப்பட்டதா? அவிழ்க்க முடியாத மர்மங்கள்!

Published on 10/06/2018 | Edited on 10/06/2018
periyar-university-mba-7


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கோப்புகள் மாயமானதா அல்லது தீ வைத்து கொளுத்தப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் அவிழ்க்க முடியாமல் நீடிக்கும் மர்மங்களால் இதில் ஆளுஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சில கோப்புகளை காணவில்லை என்று அப்போதைய பதிவாளர் மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் தற்போதைய பதிவாளர் மணிவண்ணன் அவர்களால் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் அளிக்கப்பட்டு 7 மாதங்களை கடந்தும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. யார் குற்றவாளி உண்மையில் கோப்புகள் காணாமல் போனதா அல்லது தீ வைத்து கொளுத்தப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் கோடிகளை பெற்று பணிகளை நிரப்பினார் என்று அப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. துணை வேந்தர் பதவி முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்னாள் எவ்வித கொள்கை முடிவுகளையும் எடுக்க கூடாது என்ற மறபுகளை மீறி 6 மாதத்தில் நிரப்பிய பணிகள், விட்ட ஒப்பந்தங்கள், வாங்கிய பர்னிச்சர் ஏராளம் நிதி அலுவலரே இல்லாமல் துணை வேந்தர் அவர்களும் பதிவாளர் மணிவண்ணன் அவர்களும் இணைந்து பல்கலைக்கழகத்தையே வளைத்து போட்டனர்.

இது முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவிற்கு தெரியவே அவர் பங்கு கேட்டுள்ளார். மேலும் துணைவேந்தர் ஆவதற்கு அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதால் அங்கமுத்து துணைவேந்தர் ஆனால் நாம் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டியதுதான் என்று கருதிய சுவாமினாதனும், மணிவண்ணனும் இணைந்து அங்கமுத்துவை பழிவாங்க நினைத்து பதிவாளராக பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோப்புகள் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டது.

கோப்புகள் இல்லாமல் எப்படி பதிவாளராக பதவி ஏற்றார் இரண்டு ஆண்டுகளாக கோப்புகள் இல்லாமல் எப்படி பணி ஆற்றினார், கோப்புகளை பராமரிக்கும் கண்காணிப்பாளர்கள் இவரிடம் எப்படி சொல்லாமல் இருந்தனர் என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் பத்திரிகையாளரிடம் பணி நியமன கோப்புகள் தான் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து பணி நியமனத்தில் மெகா ஊழல் நடந்ததாக அப்பொழுது கூறப்பட்ட புகார் உண்மையாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. காவல் துறை இனியும் தாமதிக்காமல் கோப்புகளை பராமரித்தவர்கள், பணி நியமனம் பெற்றவர்கள் அவர்களின் பணி அனுபவம் உண்மைதானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் பதிவாளர் சென்று விடுவதால் அதற்குள் விசாரணையினை முடிக்கி விட வேண்டும். கோப்புகள் உண்மையில் காணாமல் போனதா அல்லது தீக்கிறையாக்கப்பட்டதா என்று கண்டறிந்து குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் இல்லையேல் பல்கலைக்கழக வேந்தர் அவர்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

சார்ந்த செய்திகள்