Published on 22/11/2021 | Edited on 22/11/2021

சேலம் பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி சிறப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. பல்கலையில் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சிறப்புத் தேர்வுகள் சமீபத்தில் நடந்தன. இதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைப் பல்கலை. இணையதளமான www.periyaruniversity.ac.in மூலமாக தெரிந்துகொள்ளலாம் என பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.