Advertisment

கருப்பு நிற உடைக்கு தடை; சர்ச்சையில் பெரியார் பல்கலைக்கழகம்

periyar university black dress no allowed

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார்.

Advertisment

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருக்கிறார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து வரக்கூடாது என பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.

Salem CIRCULAR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe