Advertisment

குற்றவாளியோடு கை கோர்த்து செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் குற்றவாளியோடு கை கோர்த்து செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்: போலி ரசீது தயாரித்து நிதி மோசடி குற்றச்சாட்டிற்கு ஆளான டீன் கிருஷ்ணகுமார் ஆலோசனையின் படி தான் துணை வேந்தர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பெரியார் பல்கலை கழக வளாகத்தில் பரவலாக பேசப்படுகிறது. முன்னாள் பதிவாளர் அங்கமுத்து அவர்களின் தற்கொலைக்கு முன் எழுதிய மரண வாக்குமூலத்தில் எனது சாவுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார் தன் மீதான கிரிமினல் வழக்குகளை மூடி மறைக்க அடிக்கடி சென்னை சென்று உயர் கல்வி துறை அதிகாரிகளை சந்தித்து வழக்குகளிலிருந்து விடுபட முயற்சி மேற்கொண்டு வருகிறார் லஞ்ச ஒழிப்பு துறையும் முதல் தகவல் அறிக்கை மட்டும் தாக்கல் செய்து குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாதது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தேர்வாணையர் உதவி பேராசிரியர், இயற்பியல் துறை பேராசிரியர், வேதியியல் துறை உதவி பேராசிரியர் ஆகியோர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது ஆனால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் மீது பல்கலைக் கழகமே புகார் கொடுத்து அதனை லஞ்ச ஒழிப்பு துறை உறுதி செய்தும் பணிஇடை நீக்கம் இரண்டே நாளில் நீக்கப்பட்டது.

Advertisment

vaithiyanathan

அப்பொழுது அதற்குப் பரிசாக லகரத்தினை கிருஷ்ணகுமார் வழங்கியதாக குற்றச்சாட்டு நிலவியது இதை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஆளுஞரிடம் முறையிட உள்ளனர் கிருஷ்ணகுமாரின் டீன் மற்றும் மூத்த பேராசிரியர் பதவியினை ரத்து செய்து ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள நீதிபதியினைக் கொண்டு விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஆளுஞருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் துணை வேந்தர் முத்துச்செழியனால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் கிருஷ்ணகுமார் அவரால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் துணை பதிவாளர் சரவணன். சரவணன் குற்றமற்றவர் அவரை பணியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்திரவு இட்டும் துணை வேந்தர் அதை நிறைவேற்ற மறுக்கிறார் ஆனால் அதே முத்துச்செழியனால் ஊழல் குற்றவாளி என பணி இடை நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணகுமாரின் மீது இதுவரை பல்கலைக் கழகம் துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது ஊழலுக்கு பல்கலைக் கழகம். உயர் கல்வி துறை லஞ்ச ஒழிப்பு துறை துணை போகிறதோ என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

periyar university
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe