Periyar University accuses Vice-Chancellor. Employees!

அதிமுகஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டுசெப்டம்பர்மாதம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியபணியாளர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சக்திவேல், கிருஷ்ணவேணி,கனிவண்ணன், செந்தில் குமார் ஆகியோர் ஊடகத்தில் பேசியதால், பெரியார் பல்கலைக்கழகத்தின்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக,பல்கலைக்கழகம்மூலமாக கமிட்டி ஒன்றை அமைத்து அந்தக் கமிட்டிக்குஓய்வுபெற்ற நீதிபதிநல்லதம்பியைநியமித்துவிசாரணையைத்தொடங்கினார்கள். அந்த விசாரணைக்குபணியாளர்கள்ஆஜராகாதநிலையில், அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisment

இந்த ஒழுங்கு நடவடிக்கையைஏற்க மறுத்தபாதிக்கப்பட்ட நான்கு பணியாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்திருந்தனர். இந்த வழக்கில் எங்களின் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போதேஎங்களைபணிநீக்கம் செய்துள்ளனர். இதுசட்டத்திற்குப்புறமானது என்கிறகுற்றச்சாட்டை முன்வைத்தனர். இவ்வழக்கின் விசாரணையில், நான்கு ஊழியர்களும்போராட்டத்தின் போதுஎந்த விதமான விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்நிரூபிக்கப்படவில்லைஎன்றும், மீண்டும்பல்கலைக்கழகம்அதேகமிட்டியைஅமைத்து 7 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும்உத்தரவிட்டுஉயர்நீதிமன்றம்வழக்கை முடித்து வைத்தது.

Advertisment

இந்தசூழ்நிலையில்அதே ஓய்வு பெற்ற நீதிபதிநல்லதம்பிஅவர்களின் தலைமையில் மறுவிசாரணையைத்தொடங்கி விசாரித்ததில், நான்கு பேர் மீதானகுற்றச்சாட்டுகளும்பல்கலைக்கழகத்தால்நிரூபிக்கப்படவில்லைஎனத்தனது அறிக்கையைசமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையைதுணைவேந்தர்ஏற்க மறுத்துஅந்த நான்கு பேரையும் பணியல் சேர்க்க மறுத்துவிட்டார். மேலும், இதுதொடர்பாகஉயர்கல்வித்துறைசெயலாளர் அந்த நான்கு பேரையும் பணியில் சேர்க்கச் சொல்லியும் துணைவேந்தர் செவிசாய்க்கவில்லைஎனக் கூறப்படுகிறது.

இது குறித்து முன்னாள்பல்கலைக்கழகப் பேராசிரியர்சங்கத்தலைவர் பாண்டியன் கூறுகையில், “அவர்களேநியமித்தகமிட்டி.அவர்களேநியமித்தநீதிபதி. ஆனால், அவர்கள் கொடுத்த அறிக்கையைஎந்தக் காரணமும் சொல்லாமல் மறுப்பது என்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்?உங்களுக்குச்சாதகமாகக் கொடுத்தால் ஏற்பதும், பாதகமாக வந்தால்எதிர்ப்பதும்என்பது எந்தவிதத்தில் நியாயமாகும்?இதனை உயர்கல்வித்துறையேதெரிவித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்காததன் நோக்கம் என்ன?” என்ற கேள்விகளைஎழுப்பினார்.

இது குறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, “இரு வேறுஅறிக்கைகளைக்கொடுத்துள்ள நிலையில் தான்நாங்கள் அந்த அறிக்கையைமறுத்தோமேதவிர, வேறு காரணம் இல்லை.” என்றவரிடம்,பழையவிசாரணையைஎதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றுமறுவிசாரணைநடத்தினர். அது எப்படி இரு அறிக்கைகளாகும்எனக் கேள்வியைமுன்வைத்தபோது பேச மறுத்துதொலைப்பேசியைத்துண்டித்துவிட்டார்.