பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போய் உள்ளனர் ஆனால் பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் எனமதுரையில் கி.வீரமணி பேட்டியளித்துள்ளார்.

Advertisment

மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை மதுரை அரசு மருத்துவகல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில்,

Advertisment

 Periyar is still living ... K Veeramani Interview

நீட்தேர்வால் 8 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.நீட் ரத்து செய்யபட வேண்டும். மத்திய கல்வி கொள்கையை மத்திய அரசை விட விரைவாக செயல்படுத்தி மத்திய அரசுக்கு ராஜ விசுவாசமாக தமிழக அரசு செயல்படுத்துகிறது. 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதுமாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மத்திய,மாநில அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு என்ற மன அழுத்தம் தரும் நடைமுறையை அரசு திரும்பப்பெற வேண்டும்.

ரஜினி பெரியார் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பேசியுள்ளார். ஆனால் ரஜினி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது.பெரியார் குறித்து பேசியபோது ஆதரமாக துக்ளக்கை ஏன் காட்டவில்லை அதில் உண்மை இல்லை என்பதுதான் அர்த்தம்.பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் ஆயிரமாயிரம்பேர் காணாமல் போய் உள்ளனர். ஆனால் பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்றார்.

Advertisment