காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

The Periyar statue will be secured until further orders

ஈரோடு மாவட்டத்திலும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார் சிலைக்குஇங்கு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியாரின் இல்லமான பெரியார் நினைவகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கும் போலீஸ். பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்றனர்.