
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 9 ஆம் தேதி அவமதிப்பு செய்யப்பட்டது. இரவு நேர ஊரடங்கால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியிலிருந்த பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதோடு சிலை மீது காவிநிற பொடியும் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் யார் என கண்டறிந்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில் இந்த சிலை அவமதிப்பு தொடர்பாகக் கோவை வெள்ளளூரை சேர்ந்த இந்து முன்னணி ஆதரவாளரானஅருண் கார்த்திக் அவரது நண்பர் மோகன்ராஜை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)