சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் ஜெகதீசன் என்றும் வழக்கறிஞரான அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகதீசன் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.