/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parithi.jpg)
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மறைந்த பரிதி இளம்வழுதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பரிதி இளம் வழுதி உடலுக்கு கி.வீரமணி விடுத்துள்ள இரங்கல் :
’’மேனாள் அமைச்சரும், சுய மரியாதைக்காரரும், எழும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவருமான நம் சகோதரர் பரிதி இளம்வழுதி (வயது 58) இன்று (13.10.2018) விடியற்காலையில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது தந்தையார் தோழர் இளம்பரிதி திராவிட இயக்கக் கொள்கைகளை மேடை தோறும் முழங்கிய தீப்பொறிப் பேச்சாளர் ஆவார்.
மறைந்த தோழர் பரிதி இளம்வழுதி தொடக்கக் காலத்தில் பெரியார் திடலில் நடக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் நேயர் ஆவார். அவரின் மறைவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)