evr

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை சிலர் உடைத்துவிட்டு ஓடினர். உடைத்தவர்களை துரத்தி சென்று பிடித்து பார்த்தனர். பிடிபட்டவர் பாஜக பிரமுகர் முத்துராமன். அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி தந்தனர்.

Advertisment

அதற்குள் போலிஸார் வந்து அடிவாங்கிய முத்துக்குமாரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர் தந்த தகவல் கேட்டு சிலை உடைப்பில் ஈடுப்பட்ட பிரான்சிஸ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

பெரியார் சிலை உடைப்பு நகரில் பரவியதால் திமுக, திக, பாமக, மதிமுக தொண்டர்கள் உடைக்கப்பட்ட பெரியார் சிலை அருகில் குவிந்துள்ளனர். போலிஸ் பாதுகாப்பு நகரில் போடப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் வைத்துள்ள பாஜகவினரை உள்ளே புகுந்து தாக்கிவிடுவார்களோ என போலிஸார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர்.

Advertisment