Advertisment

ஐஐடிகளின் நடத்தையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்! (படங்கள்)

சென்னை ஐஐடியில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வெறும் 22 வயதே நிரம்பிய உன்னி கிருஷ்ணன், பிடெக் கல்வியை முடித்துவிட்டு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புராஜெக்ட் அசோசியேட்டாக சேர்ந்துள்ளார். வேளச்சேரியில் தங்கியிருந்து அன்றாடம் ஐஐடிக்கு பணிக்கு வந்து சென்றுள்ளார். இவரது தந்தை ரகு, இஸ்ரோவில் விஞ்ஞானியாக உள்ளார். தற்கொலை செய்துகொண்ட அவர் அதற்கு முன்னதாக 11 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதைக் கைப்பற்றிய காவல்துறை அதை விசாரித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

ஏற்கனவே ஐஐடி பேராசிரியர் விபின், சாதிப் பாகுபாடும் பாரபட்சமும் இருப்பதாக எழுதி வைத்துவிட்டு வேலையைவிட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். அதே குற்றச்சாட்டைக் கணித மேதை வசந்தா கந்தசாமியும் கூறியிருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார். இப்போது கேரள மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.சென்னை ஐஐடிக்குள் கடும் சாதியப் பாகுபாடுகள் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதை எப்போதும் ஐஐடி மறுத்தே வருகிறது. இந்த தற்கொலை மற்றும் ஐஐடியின் நடத்தைகளைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Advertisment

IIT COLLEGE Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe