திருவண்ணாமலை மாவட்டம், போளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகில் தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 6ந்தேதி மாலை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டுமென போளுர் நகர காவல்நிலையத்தில், திராவிடர் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அண்ணாதாசன் கடிதம் தந்துயிருந்தார்.

Advertisment

கடிதம் தந்துவிட்டு பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டுயிருந்தார். இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள திராவிடர் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வந்து கலந்துக்கொள்வதாக இருந்தது.

Periyar Birthday   permission did not give police to public meeting!

இந்நிலையில் தற்போது, அக்டோபர் 5ந்தேதி இரவு அண்ணாதாசனுக்கு, போளுர் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி கடிதத்தில், நீங்கள் கூட்டம் நடத்துவதாக குறிப்பிட்டுள்ள இடம், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் இடம் என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது எனச்சொல்லி பொதுகூட்டத்துக்கான அனுமதியை மறுத்துள்ளார்.

Advertisment

பெரியார் பற்றாளர்களோ, அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கூட்டம் நடைபெறும் இடத்தில் தான் திராவிடர் கழகமும் கூட்டம் நடத்த அனுமதி கேட்டுயிருந்தது. அப்படியிருக்க திராவிடர் கழகத்துக்கு மட்டும், இடையூறு ஏற்படும் எனச்சொல்லி அனுமதி மறுப்பது என்பது பெரியார் பற்றாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.