தந்தை பெரியாரின் 141வது பிறந்த தினம் நேற்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதும் அவரின் புகழையும், உழைப்பையும் போற்றும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

hgj

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பெரியார் திடலில் இரண்டு நாட்கள் பெரியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள், கவிஞர்கள், பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Advertisment

vgh

'தமிழ் சினிமாவில் பெரியாரும் பகுத்தறிவும்' என்ற பெயரில் இந்நிகழ்ச்சி வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. தமிழ் ஸ்டுடியோ மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது.

bj