தந்தை பெரியாரின் 142- ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.