தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலைக்கு சர்வ கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திண்டுக்கல் மணிக்கூண்டிலிருந்து முன்னாள் அமைச்சரும், கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சக்திகலைக்குழு சார்பில், பெரியாரின் முகமூடி அணிந்து தாரை தப்பட்டை முழங்க திராவிடர் கழகம், திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். அதன்பின் கழக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பழனி.ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர்களான இ.பெ.செந்தில்குமார், அர.சக்கரபாணி, மற்றும் திராவிடர் கழக மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன்,தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்துரை. சம்பத் உள்ளிட்ட பெரியார் இயக்க தோழர்கள்ஏராளமானோர்தந்தை பெரியார் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினரர்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});