தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பெரியார் விருது இந்தாண்டு யாருக்கும் வழங்கப்படாதது ஏன்? என ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், செஞ்சி ராமச்சந்திரனுக்கு இந்த ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

dfv

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்கான பெரியார் விருது யாருக்கு என்பது தமிழக அரசால் அறிவிக்கப்படாமல் இருந்தது.

Advertisment

இதனை தனது சமூகவலைதள பக்கத்தில் விமர்சித்திருந்த ஸ்டாலின், "தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்தாண்டு விருது பட்டியலில் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு முன், தங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பெண்மணி ஒருவருக்கு வழங்கினார்கள். இந்த ஆண்டு சொந்தக் கட்சியிலும் அந்த விருதுக்கு ஆள் இல்லையா, அல்லது தங்கள் டெல்லி எஜமானர்களின் மனதைக் குளிர்விப்பதற்காக தந்தை பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா? காரணம் என்ன என்பதைத் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தந்தை பெரியார் விருது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருப்பதற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த பதிவு இடப்பட்ட ஒரு மணிநேரத்தில் தற்போது 2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரனில் தங்க பதக்கம் ஆகியவை வழங்கப்படும். பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது இந்த விருது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.