Periyar, Ambedkar painting insult ... Police investigation!

கிருஷ்ணகிரியில் சுவரில் வரையப்பட்ட பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிக்கப்பட்டிருப்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் என்ற இடத்தில் அம்பேத்கர் காலனியில் மின்மோட்டார் அறையின் வெளிப்புற சுவரில் பெரியார், அம்பேத்கர் படங்கள் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளில் அந்த பகுதியில் விழா கொண்டாடுவது வழக்கம்.நாளை (14.04.2021) இந்த ஆண்டிற்கான அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு,அதற்காக புது ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர் ஓவியங்களின் மீது சாணி ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ந்த மக்கள் காவல்துறையிடம் தெரிவித்த நிலையில், போலீசார் அங்கு வந்துஇந்த அவமதிப்பு செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment