தமிழ்நாட்டை விடியவைத்த தாய்க்கிழவன்நீ!

தன்மானச் சுடர்ந்தந்த பெருநெருப் பும் நீ!

தமிழர்களை விழிக்கவைத்த கதிர்ப்பிழம்பும் நீ!

தடைச்சுவரை உடைத்தெறிந்த பேரியக்கம் நீ!

மடமைகளை பதறவைக்கும் நிலந டுக்கம் நீ!

மதங்களது முதுகில்விழும் சாட்டையடி நீ!

அடம்பிடிக்கும் ஆரியத்தின் பேரச்சம்நீ!

அறிவுலகம் கொண்டாடும் மாமனிதன் நீ!

p