Skip to main content

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - இயக்குநர்கள், கவிஞர்கள், ஓவியர்களுக்கு ’பெரியார் விருது’

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
p

 

சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று (16-1-2019) மாலை 4.00 மணி முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திராவிடர் திருநாள் நடைபெற்றது. 

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவும் திராவிடர் திருநாள் விழாவும்  (பண்பாட்டு விழாவாக...) தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

 

p

 

'மாற்று ஊடக மய்யம்' குழுவினரின் நாட்டுப்புறக் கலைகள், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் வழங்கும் சிலம்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை பொறியாளர் ச.இன்பக்கனி தொடங்கி வைத்தார்.

 

'இயற்கையைக் காப்போம் பேரிடர் தவிர்ப்போம்' ஒளிப்படக் கண்காட்சியை கோ.கருணாநிதி திறந்து வைத்தார்.  மாலை 6.00 மணியளவில் பெரியார் விருது வழங்குதல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் த.க.நடராசன் வரவேற்புரை ஆற்றினார். 

வி.பன்னீர்செல்வம், மயிலை நா.கிருஷ்ணன், தி.இரா.இரத்தினசாமி, தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இரா.வில்வநாதன், பா.தென்னரசு, இரா.முத்தையன், த.ஆனந்தன், எண்ணூர் மோகன், ஆர்.டி.வீரபத்திரன், கோ.ஒளிவண்ணன், கி.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அறிமுகவுரையாற்றினார்.

 

திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி,  ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோர் பெரியார் விருது பெற்றனர்.

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தமிழ் சான்றோர்களின் படங்களைத் திறந்து வைத்து, பெரியார் விருதுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.  பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று  நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர். இரா.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

எருமை மாட்டுப் பொங்கலாக கொண்டாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


            

சார்ந்த செய்திகள்