பெரியாரின் 142-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன்படி, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைப்பட்டுள்ள பெரியார் உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
தி.மு.க சார்பில், அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழச்சியில் தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியாரின் உருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் ம.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பெரியாரின் 142-ஆவது பிறந்தநாளான இன்று,சிம்சன் அருகே அமைந்திருக்கும் பெரியார் சிலை அருகே பெரியார் திராவிடர் கழகம் சார்பில்,இரண்டு தம்பதியினர் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
படங்கள்: ஸ்டாலின், குமரேஷ் மற்றும் அஷோக்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/dmk-periyar.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/admk-periyar.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/congress-periyar.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/vck-periyar.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/vaiko-periyar.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/marriage.jpg)