இந்திய அளவில் டாப்-10 காவல் நிலையம் - பெரியகுளம் 8வது இடம்!

p

இந்திய அளவில் டாப்-10 காவல் நிலையங்களில் தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் வடகரை காவல்நிலையம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு குஜராத்தில் டிஜிபிகள் மாநாடு நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கலாம் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் காவல் நிலையங்களில் குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தடுப்பு போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. அதோடு காவல் சமுதாய பணிகள் மூலம் பராமரிக்கப்படும் குற்றப் பதிவுகள் பொதுமக்களை வரவேற்கும் முறை காவல் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க எடுத்த முயற்சிகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தான் இந்த 2018 ஆண்டில் நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காலு காவல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.

p22

அதுபோல் தமிழகத்தில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள வடகரை காவல்நிலையம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்திலுள்ள பெரியகுளம் வடகரை காவல் நிலையம் எட்டாவது இடத்தைப் பிடித்ததை கண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வடகரை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ஈஸ்வரனுக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதோடு நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் அரசியல்வாதிகளும் கூட இன்ஸ்பெக்டருக்கு சுரேஷ்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

periyakulam top-10 police station
இதையும் படியுங்கள்
Subscribe