பெரியகுளம் அரசு டாக்டர் நித்யானந்தா ஆசிரமத்தில் தஞ்சமா?

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட அரசு டாக்டர் மீண்டும் மாயமானார் கண்டுபிடித்துதருமாறு அவரது தந்தை பெரியகுளம் போலீசில் புகார் செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயி காந்தி, அவரது மனைவி ஈஸ்வரி ஆகிய தம்பதிகளின் மகன் மனோஜ்குமார் மதுரை மாவட்டம், வெள்ளலூர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டராக இருந்து வருகிறார். இவர் தனது அக்கா மகளுடன் கடந்த ஆண்டு காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை விசாரித்த போது

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காந்தி தனது மகன், பேத்தியை விடுவிக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள் டாக்டர் மனோஜ்குமார் பெங்களுர் பிடதி ஆசிரமத்தில் இருப்பதாக கூறினார். இதையடுத்து தனது மகனை மீட்டுத் தருமாறு திருவண்ணாமலை காவல்நிலையத்தில் காந்தி புகார் அளித்தார். அதோடு பெரியகுளம் டிஎஸ்பியிடமும் எனது மகனை நித்யானந்தாவின் சீடர்கள் கடத்தி விட்டனர். எனக்கு நெஞ்சு வலி இருப்பதால் மகனையும், பேத்தியையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

Periyakulam Government Dr in Nithyananda ashramam

அதைத்தொடர்ந்து கடந்த 2018 ஜனவரி 22ம் தேதி அப்போதைய தேனி எஸ்பி. பாஸ்கரனை சந்தித்து மகனை மீட்டுத் தருமாறு புகாரும் அளித்தார். அதை தொடர்ந்து பெரியகுளம் வடகரை போலீசார் டாக்டர் மனோஜ்குமாரை காணவில்லையென வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு பிப்6 ம் தேதி பிடதி ஆசிரமத்தில் இருந்து டாக்டர் மற்றம் அவருடன் சென்ற அக்கா மகளை போலீசார் மீட்டு பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காவல்நிலையத்திற்க கொண்டு சென்றனர். அங்கு அவர்களுடன் பெற்றோர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த நித்தியானந்தாவின் சீடர்கள் மனோஜ்குமாரை அழைத்து செல்ல வந்ததாக போலீசிடம் கூறினர். பேச்சுவாத்த்தை உடன்பாடு ஏற்படாததால் இருவரையும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரும் விருப்பப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி சுந்தரி தெரிவித்தார். அதன்படி இருவரின் முழு ஒப்புதலோடு பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

பெற்றோர் பேச்சுவாரத்தை நடத்தியதால் சமாதானம் அடைந்த டாக்டர் மனோஜ்குமார், தேவாரம் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். ஆனால் பணிக்கு செல்வதாக கூறிச் சென்ற மனோஜ்குமார், கடந்த 4 மாதங்களாக காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை காந்தி, மீண்டும பெரியகுளம் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதன்படி பெரியகுளம் வடகரை காவல்துறையினர் மீண்டும் அவரைக் காணவில்லை என வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் டாக்டர் மனோஜ்குமார் மீண்டும் நித்யானந்தா ஆசிரமம் சென்றிருக்கலாமா என்றும் சந்தேகம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

govt doctors nithyananda periyakulam police
இதையும் படியுங்கள்
Subscribe