perform special pooja at Shiva temple to seek Vijayakanth well-being

நடிகரும் தேமுதிக நிறுவனத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

நேற்று மருத்துவ நிர்வாகம் அவரது உடல் சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதனால் அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. இதனால் நேற்று இரவு வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என வீடியோ பதிவு செய்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து இன்று விஜயகாந்த் உடல்நலம் குணமடைய வேண்டிதேமுதிக தொண்டர்கள் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ளபழமையான காசி விஸ்வநாதர் சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டினர். இதில் தேமுதிக கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.