Advertisment

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது 1 மாதம் பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனது தந்தை – தாயுடன் உள்ளார்.

Advertisment

perarivalan,s father admitted to kuyildhasan hospital

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையையும் காரணம் காட்டியே பரோல் பெற்று வெளியே வந்தார். கடந்த வாரம் தனது தந்தையை வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று ரத்தபரிசோதனையெல்லாம் செய்துவிட்டு வந்தார்.

Advertisment

இந்நிலையில் டிசம்பர் 4ந்தேதி தனது தந்தையை நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்நோயாளியாக அனுமதித்துள்ளார். காலை முதல் தனது தந்தையுடன் இருந்தவர் இரவில் வெளியே தங்ககூடாது என்கிற விதி இருப்பதால் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் எனக்கூறப்படுகிறது.

parole rajeev murder case Perarivalan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe