வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், கரோனா பரவலை காரணம்காட்டி, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சிறைத்துறை 30 நாள் பரோல் வழங்கியது. அதனை தொடர்ந்து அக்டோபர் 9ஆம் தேதி மதியம் சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்தவரை தாய், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். வாசலில் வைத்திருந்த கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்துக்கொண்டு உள்ளே சென்றார்.
இதுகுறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசும்போது, பரோல் காலத்தில் சிறுநீரக தொற்றுக்காக சிகிச்சை பெற உள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.