Perarivalan meets Udayanithi Stalin!

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் பேரறிவாளன். உச்சநீதிமன்றத்தில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இவ்வழக்கு சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் என பலரையும் பேரறிவாளன் நேரில் சந்தித்து தமது விடுதலைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

Perarivalan meets Udayanithi Stalin!

Advertisment

அதன் தொடர்ச்சியாக, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர்நன்றிதெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது, மாரி செல்வராஜ் உடனிருந்தார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கழக அரசின் தொடர் முன்னெடுப்பால் 31 ஆண்டு சிறைவாசத்திலிருந்து முழுமையான விடுதலையை அடைந்துள்ள அண்ணன் பேரறிவாளன் அவர்கள் அற்புதம்மாள் அவர்களுடன், சேலம் படப்பிடிப்பில் இருந்த என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியால் நிரம்ப வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.