தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று (03.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அண்ணா சாலையிலிருந்து பேரணியாகச் சென்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.