Advertisment

முற்றுகையிட்டு கேள்வி எழுப்பிய விவசாயிகளிடம் மெத்தன பதில் கூறி நழுவிய பெரம்பலூர் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பனை விவசாயத்திற்கு மாவட்ட ஆட்சியர் முக்கியத்துவம் அளிக்கவில்லை என மத்திய அரசின் நீர் மேலாண்மை இயக்க கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் சராமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

s

பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் பகுதியில் உள்ள ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் இந்திய அரசின் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பாக நீர் மேலாண்மை நெறிமுறைகள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகள் திடீரென எழுந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பனை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து அங்குள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பனை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பனை விவசாயத்திற்கு எந்த வித முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும், இயற்கை சீற்றங்களை தாங்ககூடிய பனை சாகுபடிக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வில்லை எனவும் சராமாரியாக கேள்வி எழுப்பி, மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் மெத்தனமாக பதில் கூறி விட்டு சட்டென்று கிளம்பி சென்றதால் விவசாயிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

Perambalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe