Advertisment

இரட்டை குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை; கணவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை 

perambalur twin child and young women incident 

Advertisment

பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிக்காடுஅருகே உள்ள பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). இவர் அரபு நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் ஜெயாவிற்கும் திருமணமாகி தற்போது இரண்டு வயதில்இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. விஜயகுமார்அரபு நாட்டில் வேலை செய்து வருவதால், அவரது மனைவி ஜெயாவும் இரண்டு பிள்ளைகளும் அவரது தாய் வீடான ராமநத்தம் கிராமத்தில் வசித்து வந்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயா தனது குழந்தைகளுடன் பென்னகோணத்தில் உள்ள கணவரின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாகியும் ஜெயாவின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்தும், இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மங்களமேடு காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளுக்கு ஜெயா உணவில் விஷம் கலந்து கொடுத்து அதை சாப்பிட்ட குழந்தைகள் இறந்துள்ளதைஅடுத்து ஜெயாவும் தற்கொலை செய்து கொண்டதுதெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெயாவின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரின் தாய்,தம்பி வினோத் குமார் மற்றும்அவரது மனைவி பிரியா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police Perambalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe