அங்கன்வாடிக்கு சீர்... ஊர்வலமாக எடுத்து சென்ற குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி...

பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளை,பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்புஆகியவை இணைந்து பெரம்பலூர் மாவட்டம் கோனேரிப்பாளையம் கிராமத்தில் கோனேரிப்பாளையம் (மேற்கு) அங்கன்வாடி மையத்திற்கு சீர் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

perambalur school function

குழந்தைகளுக்கு தேவையான கோரைப்பாய் , பருத்தி நூல் துண்டு , நகம் வெட்டி, கை கழுவும் சோப்பு , வரைபட புத்தகம் , வண்ண பென்சில்கள் , ஊஞ்சல் , திறன் வளர்க்கும் விளையாட்டு பொருட்கள் , விளையாட்டு பொம்மைகள் , கல்வி உபகரணங்கள் , குழந்தைகள் எடையிடும் கருவி, குழந்தைகள் அமரும் நாற்காலிகள் , தண்ணீர் பிடிக்க உதவும் பேரல் , பலப்பம் போன்ற பொருட்களை இசைக்கருவிகள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று பெரம்பலூர் வட்டார குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி திருமதி.பிரேமா அவர்கள் முன்னிலையில் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளையின் செயலர் டாக்டர்.ஈ.மித்ரா அவர்கள் அங்கன்வாடி மைய ஆசிரியை திருமதி. வசந்தா அவர்களிடம் வழங்கினார்கள்.

perambalur school function

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்தலை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ஒரு துணிப்பை வழங்கி பிளாஸ்டிக்கை தவிப்போம் என்னும் உறுதிமொழி ஏற்கப்பட்டது .

நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டார குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி திருமதி.பிரேமா, வளைகரங்கள் சங்க தலைவி திருமதி.அமராவதி , கோனேரிப்பாளையம் மகளிர் சுய உதவிக்குழு தலைவி திருமதி.செல்வி திரளான பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி மைய ஆசிரியை திருமதி . வசந்தா மற்றும் உதவியாளர் திருமதி.விஜயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் .

Perambalur schools
இதையும் படியுங்கள்
Subscribe