Advertisment

'போக்சோ' சட்டத்தில் வாலிபர் கைது...

Perambalur

பெரம்பலுர் மாவட்டம் தம்பிரான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயது சரவணன். பாடாலூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை சரவணன் காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடந்த 22ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோர் பாடாலூர் போலீசிடம் புகார் அளித்தனர்.

Advertisment

போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தம்பிரான் பட்டி சரவணன் கடத்திச் சென்றது தெரியவந்தது. மைனர் பெண்ணைக் கடத்திச் சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணன் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

Police investigation complaint parents Perambalur
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe