ddd

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ளது வி.களத்தூர். மில்லத் நகரில் வசிப்பவர் சாகுல் அமீது. வயது 40. இவருக்கு ரகமதுன்னிஷா (35) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். சாகுல் அமீது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அவரது வீட்டில் மேல் மாடியில் ரகமதுன்னிஷா அவரது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் அவரது மாமனார் சபியுல்லா, மாமியார் முஸ்தூரி பேகம் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல், அவர்கள் வீட்டுக்குப் பால் கொடுப்பதற்காக,பால்காரர்சென்றுள்ளார். அப்போது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து பால்காரர் கீழ் வீட்டில் குடியிருந்த ரகமதுன்னிஷாவின் மாமனார் மாமியாரிடம் துர்நாற்றம் வீசுவது குறித்துக் கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து வி.களத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து விரைந்து வந்த போலீஸார் மாடிக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரகமதுன்னிஷா தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். கீழே அவரது இரு பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்துகிடந்தனர். உடனே மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இறந்து போன ரகமதுன்னிஷாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவரது கணவர் சாகுல் அமீது வெளிநாட்டிலிருந்து மனைவி மருத்துவச் செலவிற்காக அவ்வப்போது பணம் அனுப்பி வைத்ததாகவும், அந்தப் பணத்தை அவரது உறவினர்கள் சரிவர கொடுக்கவில்லை என்றும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ரகமதுன்னிஷா தற்கொலை செய்து கொண்டதோடு தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Advertisment

இப்படி குடும்பப் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகள்களும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வி.களத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.