பெரம்பலூர் மாவட்டம் அப்புறம் படையைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற பச்சையம்மாள். இவர் கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் என்பவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பச்சையம்மாள் செந்தில் குமாரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் செந்தில்குமாருக்கு பச்சையம்மாள் மீது மிகுந்த கோபம் இருந்துள்ளது. இதையடுத்து இன்று வீட்டில் தனியாக இருந்த பச்சையம்மாள் சென்று சந்தித்துள்ளார் செந்தில்குமார். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பச்சையம்மாளின் கழுத்தை அறுத்து உள்ளார். பச்சையம்மாளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

Advertisment

perambalur district ilegal connection incident police investigation

அவர்கள் வருவதை பார்த்து செந்தில்குமார் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பச்சையம்மாள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது சம்மபந்தமாக அரும்பாவூர் போலீசார் பச்சையம்மாள் கழுத்தை அறுத்த கள்ளக்காதலன் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.